Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு தெ.ஆபிரிக்காவின் அனுபவங்களையும் பயன்படுத்தி கொள்ள முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு நடத்தப்பட்ட விழாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதன் போது தெ.ஆபிரிக்க தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தெ.ஆபிரிக்க உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நீதிமன்றத்தை போன்று திறம்பட செயற்படும் ஒரு நிறுவனம். மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களுக்கும், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் கருத்துக்களும் மதிப்பளிக்கும் வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததால், இக்குழு மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது என்றார்.

இதேவேளை எதிர்வரும் 17, 18 மற்றும் 19ம் திகதிகளில் திட்டமிட்டபடி அரசாங்கத்துடன், பேச்சுவார்த்தைகளை திட்டமிட்டவாறு நடத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதியுத்தத்தின் பாதுப்பு தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ள இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையானதாக இல்லை எனவும், மனித உரிமை குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதில் அளிக்கவில்லை எனவும் கனடா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தகது.

0 Responses to தெ.ஆபிரிக்காவின் நல்லிணக்க ஆணைக்குழு திறம்பட செயற்படுகிறது: கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com