Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தே.மு.தி.க. தலைவர் உருவபொம்மை எரிப்பு

பதிந்தவர்: தம்பியன் 02 February 2012

சட்டசபையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் நடவடிக்கைகளை கண்டித்து ஊத்துக்கோட்டை குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் பணியாற்றும் அ.தி.மு.க. வக்கீல்கள் 02.02.2012 காலை போராட்டம் நடத்தினர்.

வக்கீல்கள் வேல்முருகன், வெற்றி தமிழன், சதீஷ், பாலகிருஷ்ணன், கணபதி, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் கோர்ட்டு அருகே உள்ள சாலைக்கு விஜயகாந்த் உருவ பொம்மையை கொண்டு சென்றனர். பின்னர் அதை நடுரோட்டில் வைத்து தீவைத்து எரித்தனர். அப்போது அவர்கள் விஜயகாந்துக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

0 Responses to தே.மு.தி.க. தலைவர் உருவபொம்மை எரிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com