நீடாமங்கலம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் தொடர்பாக, திவாகரனை நள்ளிரவில் கைது செய்த போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
ரிஷியூரைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர், திவாகரன் மீது வீடு இடிப்பு புகார் அளித்தார். கடந்த மாதம் 21ஆம் தேதி இந்த புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக ரிஷியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த சில நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில், திவாகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், நீடாமங்கலம் மாவட்ட குற்றவியல் நீதிபதி செல்லபாண்டி முன்பு திவாகரன் ஆஜர்படுத்தப்பட்டார். திவாகரனை பிப்ரவரி 16ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
தமிழன் செய்தி



0 Responses to சசிகலா தம்பி திவாகரன் கைது! தமிழன் செய்தி இணைப்பு