விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’கடுமையான விமர்சனங்கள், விவாதங்கள் சட்டசபையில் நடந்தாலும், நாகரீக எல்லையை மீறி யாரும் நடந்துகொள்ளவில்லை.
நாக்கை கடித்து எதிர்தரப்பை எச்சரிப்பது போல விஜயகாந்த் நடந்துகொண்ட அணுகுமுறை அரசியலில் போதிய பக்குவம் இல்லாத நிலையை உறுதிப் படுத்துகிறது’’ என்று கூறினார்.
அவர் மேலும், ‘’நாகரீகமற்ற முறையில் விஜயகாந்த் நடந்து கொண்டாலும், அவரை சட்டசபையில் இருந்து 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்தது ஏற்புடையைதல்ல’’ என்றும் கூறினார்.



0 Responses to விஜயகாந்துக்கு அரசியல் பக்குவம் இல்லை: திருமா