Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆபாச படம் பார்த்த சிக்கியது எப்படி?

பதிந்தவர்: ஈழப்பிரியா 09 February 2012

கர்நாடக பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள் சிக்கியது எப்படி என்பது குறித்து படம் பிடித்த டிவி கேமராமேன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

டிவி கேமராமேன் சீனிவாஸ் குல்கர்னி, ‘’அமைச்சர் லட்சுமண் சவதி, மாடத்தை பலமுறை நோட்டமிட்டார். பின்னர் கீழே குனிந்து கொண்டார். அருகிலிருந்த அமைச்சர் பாட்டீலும் தூங்கி வழிவதைபோல இருந்தது.

எனது கேமராவை அவர்கள் பக்கம் திருப்பினேன். அப்போது அமைச்சர் சவதி நிமிர்ந்து மாடத்தை ஒரு நொடி பார்த்தவர் மீண்டும் பார்வையை தாழ்த்திக் கொண்டார்.

அவர் தூங்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். அவர் செல்போனில் எதையோ பார்ப்பது போல இருந்தது.

பாட்டீலும் அவருடன் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தார்.

எனவே, அவர்கள் செல்போனில் எதையோ பார்த்து பேசுகி றார்கள் என்று ஊகித்து கேமராவை ஜூம் செய்தேன். அப்போது, செல்போனில் ஆபாச காட்சிகளை அமைச்சர் பார்த்ததை படம் பிடித்தேன்’’என்று பேட்டியளித்தார்.

இதற்கிடையே, சர்ச்சையில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்களின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க வேண்டும். அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

0 Responses to ஆபாச படம் பார்த்த சிக்கியது எப்படி?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com