Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“தேசியத்தலைவர் பிரபாகரன் என் மதம், மொழி, ஜாதி” என உருகி அரங்கையும் உருக வைத்தார் இனமான தலைவரும் திரைப்பட இயக்குனருமான புகழேந்தி தங்கராஜ்.
பெங்களூரில் நிகழ்ந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு ஈக தீபத்தை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

”நான் ஒரு முறை டில்லியில் பயணித்த போது சக பயணியான ஒரு இஸ்ரேலியன் எனது உடையினை உற்று நோக்கி “நீங்கள் எந்த இனம்” என்றான். தமிழன் என்றேன். ஓ! பிரபாகரன் இனத்தை சேர்ந்தவரா? என்றான். ஆம் பிரபாகரன் என் மதம் மொழி ஜாதி. இதை விட உயர்வாக நான் என்னை அடையாளப்படுத்த முடியாது.

ராமன் இருக்கும் இடம் அயோத்தி என்றார்கள் ஆனால் ராமன் காட்டுக்கு சென்றபோது அயோத்தி கூடவேசென்றதா, இல்லை. ஆனால் எம் தலைவர் சென்ற இடமெல்லாம் தமிழீழம் (மக்கள்) தொடர்ந்து சென்றது.

தலைநகராம் கிளிநொச்சியை விட்டு தலைவர் இடம் பெயர்ந்த போது ஒரு பேப்பரையும் கூட விட்டுவைக்காமல் சேகரித்து கொண்டு நகரமே அவருடன் நிழல் என தொடர்ந்தாதே அதை எந்த செய்மதியாலும் பதிவு செய்ய முடிய வில்லையே. தலைவர் வேண்டாம் என்னோடு வரவேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் எங்கள் தலைவன் இருக்கும் இடம் தான் எங்கள் கிளிநொச்சி என்று இன்னுய்ரை துச்சமென நினைத்து தொடர்ந்தனர் எம் மக்கள். இதனை எந்த காவியம் மிஞ்சும்” என்றார்.

தமிழனை அழித்துவிட்டு தமிழை வளர்க்கப்போகிறீர்களா? தமிழன் இருந்தால் தமிழ் தானாக வளரும். கள்ள மௌனம் காத்து ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை அழித்தவர்கள் செம்மொழி மாநாடு போடுகிறார்கள். மகளுக்கு பதவி நாற்காலி வேண்டுமென சக்கர நாற்காலியில் சுற்றி பிச்சை எடுக்கிறான் ஒரு தலைவன். தன் இன்னுயிரை தந்தைக்கென, இனத்துக்கென ஈகம் செய்கிறான் தனயன். இரண்டையும தமிழுலகம் பதிவு செய்திருக்கிறது” என்றார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்.

ராஜ்குமார்

4 Responses to தேசியத்தலைவர் பிரபாகரன் என் மதம் மொழி ஜாதி: உருகவைத்தார் புகழேந்தி

  1. எம் தேசியத் தலைவர் காலத்தில் வாழ்ந்ததில் நாம் பெருமைப்படுகின்றோம். பலகோடி தமிழர்கள் தமிழகத்தில் வாழ்ந்தாலும் உலகில் தமிழ் மொழியை அடையாளம் காட்டியவன் ஈழத்தமிழன். அந்தப் பெருமையும் என் தலைவனுக்கே சாரும். ஒருவன் சுயநலத்திற்காக தமிழன் என்றான் என் தலைவன் எம் நலத்திற்காக தமிழனாக வாழ்ந்தான். வாழ்கிறான். வாழ்வான்.

     
  2. Tamil & Tamilan will rise to power sooner to eliminate evil forces. We will make this happen by enhancing unity...make our Leader Prabaharan feel proud on us.

    Resilient Tamilan - Vijay

     
  3. இந்த கட்டுரையை புலம் பெயர்ந்து வாழும் எந்த தமிழனாவது படிக்க நேர்ந்தால் அவர்களுக்கு தமிழக தமிழன் சார்பில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த உலகில் உள்ள 10 கோடி தமிழனில் 80 % தமிழ்நாட்டில் இருந்தாலும், ஒட்டு மொத்த தமிழனுக்கு தலைமை தாங்குகிற தகுதி இங்கு தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை.அது தேசியத் தலைவருக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு பின் ஈழ தமிழனுக்கு மட்டுமே அந்த தகுதியும், வழி நடத்தும் பாங்கும் உள்ளது என்பதை இங்கு அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறேன்.

    "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

     
  4. //மகளுக்கு பதவி நாற்காலி வேண்டுமென சக்கர நாற்காலியில் சுற்றி பிச்சை எடுக்கிறான் ஒரு தலைவன்.//

    (பிரபாகரன்)தமிழனை பற்றி பேசும் போது (கருணாநிதி)தெலுங்கனை பற்றி தங்கராஜ் ஏன் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை? வேண்டாம் தங்கராஜ். கோவத்தை கிளறாதீங்க.இடித்து கூறுவதற்கு கூட தேசிய தலைவரையும், அந்த நான்கு சக்கர நாற்காலி கழிசடையும் அருகருகே எழுதி பேசாதீர்கள். அருவருப்பாக இருக்கிறது.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com