பலவந்தமாக என்னைக் கடத்திச் சென்று, போலிக் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைத்து எதிர்வரும் 8ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. எனக்காக நடத்தப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மக்களிடம் கோரியுள்ளார்.
மனித உரிமை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி, மனசாட்சிக்கிணங்க பணியாற்ற முடியாமையினால் இன்று பதவி விலகியுள்ளார். அந்த உயரதிகாரியை நாம் பாராட்டுகின்றோம்.
இதன் மூலம் யார் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது வெளிப்படுகின்றது. இந்த நிலைமைகளை மாற்றி அமைப்போம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யுத்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.



0 Responses to எனக்காக போராடுங்கள்!- மக்களிடம் சரத் கோரிக்கை