“இலங்கையில் அமைதி , சட்டம் மற்றும் மனித உரிமைகளின் பங்கு என்ன” எனும் தொனிப்பொருளில், ஜேர்மன் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கருத்துப் பகிர்வொன்று இடம்பெற்றுள்ளது.
இக்கருத்துப் பகிர்வில், கட்சிப்பிரதிநிதிகள், கல்வியாளர்கள் , மனித உரிமைச் செற்பாட்டாளர்கள் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.
இக்கருத்தரங்கில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சின், ஜேர்மன் பிரிதிநிதியான வாசுகி தனராஜா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்..
இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு, சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்தும் பேசப்பட்டது.
இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறுவதில் இருந்து, சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக கருத்துரைத்த ஜேர்மன் நாடாளுமன்றப் பிரதிநிதி Christophe Strasser,சுயாதீன சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஏமாற்றத்தை தருவதாக குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் Ute Koczy அவர்கள், போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழர்களின் நிலைவரம் குறிப்பாக பெண்கள் பெரும் துயரைச் சுமப்பதாக தெரிவித்தார்.
கருத்தரங்கின் நிறைவாக, இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில், சுயாதீனமான விசாரணையின் அவசியத்தை எல்லோரும் வலியுறுத்தினர்.
யேர்மனியில் இலங்கை விடையமாக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு!
பதிந்தவர்:
தம்பியன்
10 February 2012



0 Responses to யேர்மனியில் இலங்கை விடையமாக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு!