Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவும் ஐரொப்பிய ஒன்றியமும் ஈரான் மீது மேற்கொள்ளும் பொருளாதார தடையால், இலங்கைப் போன்ற சிறிய நாடுகளே பாதிக்கப்படுகின்றன. எனவே தற்போதைய நிலையில் தீர்மானம் எடுப்பதற்காக ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு செய்தியாளர்களை நேற்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை, ஈரானிடம் இருந்து 93 வீத மசகு எண்ணெய்யை 7 மாத கடன் அடிப்படையில் இறக்குமதி செய்து வருகிறது. இதன்மூலமே மின்சாரம் உட்பட்ட பல்வேறு உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தநிலையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானை தண்டிக்கவில்லை. இலங்கை போன்ற சிறிய நாடுகளையே தண்டிக்கின்றன என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்கிடையில் சீனாவின், இலங்கை பிரசன்னம் வர்த்தகமே தவிர, அரசியல் அல்ல என்று, சீன நிதியுதவியுடன் மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் கடற்படைத்தளம் ஒன்று அமைக்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கே ஜனாதிபதி மகிந்த இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், ஈரானுக்கு டொலர் கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க தூதரகம், இலங்கை மத்திய வங்கியை கோரினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் கேட்க்கப்பட்டது,

அதற்கு பதிலளித்த அவர்,

நேரடியாக அவ்வாறு இதுவரை கேட்கப்படவில்லை என்றும் இதேவேளை, இது குறித்து பேச்சு நடத்துவதற்காக அமெரிக்காவின் தெற்காசிய உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளக் இலங்கைக்கு வரவுள்ளார்.

அத்துடன் இந்திய பெற்றோலியத்துறை அமைச்சு அதிகாரிகளும் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

0 Responses to எமது சிறிய நாடுகளையே அமெரிக்கா தண்டிக்கிறது: மகிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com