Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக ஒன்றுகூடலிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஊடாக இந்திய மத்திய அரசின் ஆதரவைக் கோரியுள்ளது

ஒபாமாவுக்கான தமிழர் (Tamils for Obma) அமைப்பு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில், ஜெனீவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக ஒன்றுகூடலில் சிறிலங்காவிற்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்படுமிடத்து, அதற்கு இந்திய மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுள்ளனர்.

மேலும், இந்தியா தற்போது இந்த ஆணையக அங்கத்துவ நாடாக இல்லாது விட்டாலும், பிராந்திய வல்லரசு என்பதாலும். சிறிலங்கா இந்தப் பிராந்தியத்தில் இருப்பதாலும், இந்தப் பிரேரணையை ஆதரிப்பதால், இந்த ஆணையகத்திலுள்ள 47 நாட்டு தலைவர்களும் இந்தப் பிரேரணையை ஆதரிப்பார்கள்.

இந்தப் பிரேரணை வெற்றிபெறுமிடத்து, தமிழ் மக்களுக்கு இதன்மூலம் நீதி கிடைக்கும் என்றும், ராஜபக்ஸ போன்ற அரச தலைவர்கள் எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்களை செய்யத் தயங்குவர் என்றும் எழுதியுள்ளனர்.

இக்கடிதத்தை முழுமையாக வாசிக்க இங்கே அழுத்தவும்:

http://www.tamilsforobama.com/letters/Letter_to_Jayalaitha_requesting_India_help.html

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றப்படவுள்ள சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு கோருகிறோம்

பெப்ரவரி 10, 2012

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மா அவர்கட்கு,

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு சார்பாக நாம் எழுதிக் கொள்வது,

இம்மாத இறுதியில் ஜெனீவாtவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் நடைபெறும் ஒன்றுகூடலில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்காவிற்கு எதிராக பிரேரணை வருமிடத்து, இந்தப் பிரேரணையை இந்திய மத்திய அரசு வெளியிலிருந்து ஆதரிப்பதுடன், ஆணையகத்திலுள்ள 47 நாட்டுத் தலைவர்களுக்கும் இந்த பிரேரணையை ஆதரிக்க வேண்டிய அவசியத்தை தெரிவித்து, அவர்களும் இந்தப் பிரேரணையை ஆதரிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும், இந்த பிரேரணை நிறைவேற்றப்படுமிடத்து, எமது தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்களை உலகறியச் செய்வதுடன், எமது தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வும் கிடைக்கும். அத்துடன் இந்த குற்றங்களை புரிந்தவர்கள் தண்டிக்கப்படவும் முடியும். மேலும் இதனால் மகிந்த ராஜபக்ஸ போன்ற உலக அரச தலைவர்கள் இவ்வாறு கொடுமைகளை செய்வதற்குத் தயங்குவர்.

இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்நாட்டு தமிழ் மக்கள் சார்பாக நீங்கள் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, இந்திய அரசாங்கத்தை இந்த நீதியான தீர்மானத்திற்கு ஆதரவளிக்க கோருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வண்ணம்,
அன்புடன்,
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு (Tamils for Obama)

0 Responses to முதலமைச்சர் ஊடாக இந்திய மத்திய அரசின் ஆதரவைக் கோரி ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு கடிதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com