Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதுரையில் கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி நேர்காணல் மற்றும் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த இரு நிகழ்ச்சிகளையும் அழகிரியின் ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். குறிப்பாக மதுரை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் 14 பேர் புறக்கணித்தனர்.

இதையடுத்து திமுக தலைமை அதிரடி முடிவு எடுத்துள்ளது. ஸ்டாலினை புறக்கணித்த 14 பேருக்கு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முன்னாள் மேயர்கள் குழந்தைவேலு, தேன்மொழி, முன்னாள் துணை மேயர் மன்னன், பொருளாளர் மிசா பாண்டியன், பொட்டு சுரேஷ் மற்றும் மாவட்ட துணைச்செயளாளர்கள் உதயகுமார், சின்னம்மாள், சின்னசாமி, சிவக்குமார், எம்.எல்.ராஜ் உட்பட முபாரக் ஆகியோருக்கு திமுக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், பாண்டியராஜன், கணேஷன், ஆர்.எஸ். ராமலிங்கம்,முருகன், முருகவேல் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

’’நீங்கள் மதுரையில் கழக பொருளாளர் கலந்துகொண்ட நிகழ்ச்சியை புறக்கணிப்பு செய்துள்ளீர்கள். ஏன் உங்களை கட்சியை விட்டு நீக்கக்கூடாது. இது குறித்து 7 நாட்களுக்குள் தலைமை கழகத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் கட்சி நீக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஸ்டாலினை புறக்கணித்த அழகிரி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நோட்டீஸ் : திமுக தலைமை அதிரடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com