Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தில்லியில் 16-4-2012 அன்று நடைபெற்ற உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த முதல்வர்கள் மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா - அவரது தலைமையின் கீழ் தமிழ்நாடு காவல் துறை, திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவதில் தலைசிறந்த நிலையில் உள்ளது என்றும், அவரது ஆட்சிக் காலமான கடந்த 11 மாதங்களில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகின்ற எத்தகைய நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்பதை பெருமையோடு கம்பீரமாகத் தெரிவித்துக் கொள்வதாகவும் பேசியிருக்கிறாரே?

பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகின்ற எத்தகைய நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்று ஜெயலலிதா குறிப்பிட்ட போதிலும், தமிழகத்தில் இந்த 11 மாதக் காலத்தில் 386 கொலைகள், 178 செயின் பறிப்புகள், 34 வழிப்பறிச் சம்பவங்கள், பத்துக்கு மேற்பட்ட லாக்-அப் மரணங்கள் நடைபெற்றுள்ளன. பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்று, ஆறு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

அரசில் பணியாற்றி வந்த 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை எந்தக் காரணமும் இன்றி நீதி மன்றங்கள் கூறியும் கேட்காமல் வேலை கொடுக்க மறுத்ததால் இதுவரை இருபது பேர் தங்கள் இன்னுயிரை பலி கொடுத்திருக்கிறார்கள்.


அதற்காக அறப்போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் நலப் பணியாளர்கள் இந்த அரசினால் கைது செய்யப் படுகிறார்கள்.

கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சினையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்து, ஆலையை ஆறு மாத காலம் மூடி வைக்க ஜெயலலிதா காரணமாக இருந்ததால், பணியின்றி சும்மாயிருந்த பணியாளர் களுக்கு 900 கோடி ரூபாய் ஊதியமாக இந்த ஆறு மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரே மாதத்தில் 16 கொலைகள் என்று பெரிதாகத் தலைப்பிட்டு ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டு, யார் யார் கொலை செய்யப்பட்டார்கள் என்ற விவரத்தையும் எழுதியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் அகராதிப்படி இவைகள் எல்லாம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காத செயல்கள் போலும். வேடிக்கையான வேதனை என்ன வென்றால், ஜெயலலிதா தில்லி மாநாட்டில் முதல்வர்களுக்கு நேராக தமிழ்நாடு தன்னுடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அமைதியாக இருக்கிறது என்று சொன்ன அதே நாள் நாளேடுகளில் -

சென்னை நெற்குன்றத்தில் அடகுக் கடை உரிமையாளர் குணாராமைக் கொன்று நகை கொள்ளை.


போச்சம்பள்ளி அருகில் இளம்பெண் படுகொலை.

கோவையில் தம்பதியைக் கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை.

தேன்கனிக்கோட்டையில் பெண் தர மறுத்தவர் கொலை.

திருவல்லிக்கேணி லாட்ஜில் ஓட்டல் ஊழியர் தங்கபாண்டியன் கொலை.

சென்னை வாலிபரைத் தாக்கி இரண்டரை லட்சம் ரூபாய் பணம் பறிப்பு என்றெல்லாம் வந்த சம்பவங்களை அவர் டெல்லியில் இருந்த காரணத்தால் படிக்க இயலவில்லை போலும்.

மிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் அளவினை மத்திய அரசு குறைக்க தி.மு.க. கூட்டுச் சதி செய்வதாக தமிழக அமைச்சர் ஒருவர் பேரவையில் சொல்லியிருக்கிறாரே?

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டிதானே? மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ பெற வக்கற்றவர்கள் இப்படித்தான் எதற்கெடுத்தாலும் தி.மு.க. வைக் குறை சொல்வார்கள். தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது தமிழகத்தின் தேவைகளுக்காக மத்திய அரசிடம் பல முறை கடிதம் மூலமாகவும், நேரிலும் சென்று கேட்டு, கோரிக்கை வைத்து அதிக மண்ணெண்ணெயைப் பெற்று மக்களுக்கு வழங்கினோம். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் தி.மு.க. கூட்டுச் சதி என்று கூறி, பொது மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

டந்த பத்து மாதங்களில் நிலப்பட்டா ஒரு லட்சம் பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆனால் அதையும் தாண்டி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 149 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் வருவாய்த் துறை அமைச்சர் பேரவையில் சொல்லியிருக்கிறாரே?

தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் 2006ஆம் ஆண்டு மே திங்கள் முதல் 15-2-2011 வரை மொத்தம் 8 இலட்சத்து 29 ஆயிரத்து 236 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் ஏழை யெளிய மக்களுக்கு வழங்கப்பட்டன. இப்படி இலவச வீட்டு மனைப் பட்டா பெற்றவர்களில் ஆதி திராவிடர்கள் 2 லட்சத்து 16 ஆயிரத்து 649 பேர் - பழங்குடியினர் 16 ஆயிரத்து 323 பேர் - பிற்படுத்தப்பட்டோர் 3 லட்சத்து 9 ஆயிரத்து 927 பேர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 2 லட்சத்து 45 ஆயிரத்து 463 பேர். ஏனையோர் 34 ஆயிரத்து 568 பேர்.

இது தவிர, 2006ஆம் ஆண்டு தி.மு. கழகத் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டம், 17-9-2006 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

அந்தத் திட்டத்தின்கீழ் 15-2-2011 வரை 41 ஆயிரத்து 970 ஆதி திராவிடர்களுக்கு 45 ஆயிரத்து 65 ஏக்கர் நிலமும் - 3 ஆயிரத்து 277 பழங்குடியினர்க்கு 3,872 ஏக்கர் நிலமும் - 66 ஆயிரத்து 790 பிற்படுத்தப்பட்டோருக்கு 82,223 ஏக்கர் நிலமும் - 58 ஆயிரத்து 269 மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 62,084 ஏக்கர் நிலமும் - பிற வகுப்பினரில் 8,692 பேருக்கு 19,750 ஏக்கர் நிலமும் என மொத்தம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 2 பேருக்கு, 2 இலட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் நிலம் தி.மு. கழக ஆட்சியில் இலவசமாக வழங்கப்பட்டது.

0 Responses to ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அமைதியாக இருக்கிறதா?: கலைஞர் பதில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com