ஜெயலலிதாவை குஷிப்படுத்தவே அமைச்சர்கள் என்னை விமர்சனம் செய்து பேசிவருகின்றனர் என்று தேமுதிக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தெரிவித்தார்.
திருக்கோயிலூர் செல்லும் வழியில் வியாழக்கிழமை நெய்வேலி வந்த விஜயகாந்த், செய்தியாளர்களிடம் பேசும்போது,
பேரவையில் தன்னை குறிவைத்தே விமர்சனங்கள் நடைபெறுகின்றன. ஜெயலலிதாவை குஷிப்படுத்தவே அமைச்சர்கள் என்னை விமர்சனம் செய்து பேசிவருகின்றனர். ஜெயலலிதாவை குஷிப்படுத்துவதாகக் கூறிகொண்டு அவரையே மறைமுகமாக விமர்சிக்கின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் தேமுதிகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் தேர்தலில் நிற்கவே மாட்டோம் எனக் கூறியதை மறந்துவிட்டார்களா?
ஜெயலலிதா நினைத்தால் 0 வை 29 ஆக ஆக்கலாம், 29 ஐ 0 வாக ஆக்கலாம் என ஒரு அமைச்சர் பேசியிருக்கிறார். ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் யார் 0 வாங்கினர் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் இவர்கள் எப்படி தோற்றார்கள். எங்களிடம் 10 வாக்குகள் இருப்பதை அறிந்துதானே கூட்டணி வைத்தார்கள் என்றார்.



0 Responses to ஜெயலலிதாவை குஷிப்படுத்தவே என் மீது விமர்சனம்! விஜயகாந்த் பேட்டி!