Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரும் பத்து வருடங்களில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோரின் உதவியாளனும் நண்பனாகவும் மாறப்போவது ரோபோக்களே..

குறைந்த சம்பளத்தில் பணியாற்றுவோருடைய இடங்களை இனி இந்த றோபோக்களே நிரப்பப் போகின்றன.

இதற்காக எஸ்.எம்.ஈ இரக றோபோக்களை கொள்வனவு செய்யும் முயற்சிகள் ஆரம்பித்துவிட்டன.

எஸ்.எம்.ஈ றோபோக்கள் மனிதனுடன் சேர்ந்து வேலை செய்வதற்காக புரோகிராம் செய்யப்பட்ட சிறிய ரோபோக்கள்.

2005 – 2009 காலப்பகுதியில் அபிவிருத்தி செய்யப்பட்ட இந்த ரோபோக்கள் சிறியவை ஆனால் ஓர் உதவியாளரின் பணியை செப்பமாக செய்யக்கூடியவை.

விலை ஓர் இலட்சம் அமெரிக்க டாலர்கள், இரண்டு சாதாரண பற்றரியில் இயங்கும், வேலைத்தல மேசையில் பொருத்திவிடலாம்.

இதற்காகவே தற்போது தொழிற்சாலைகள் 12 – 14 வீதமான இடப்பகுதியை விரிவாக்கம் செய்ய ஆரம்பித்துவிட்டன.

இப்போதே டென்மார்க்கில் 5000 தொழில் இடங்களில் எஸ்.எம்.ஈ றோபோக்கள் இடம் பிடித்துவிட்டன.

தானாகவே ஸ்ராட் செய்து, பணி முடிந்ததும் தானாகவே நிறுத்திவிக்கூடியவை எஸ்.எம்.ஈ றோபோக்கள்.

இதே றோபோக்களை தற்போது சீனாவும் செய்வதால் மேலும் மலிவாக வாங்க முடியும் என்று கூறுகிறார்கள் தொழில் நிபுணர்கள்.

சுமார் 300 பேர் உள்ள தொழிற்சாலையில் 100 பேரை மட்டும் பணிக்கு வைத்துக் கொண்டு, மற்றய 200 பேரை நீக்கிவிடலாம்.

பொருளாதார வசதியும், ஆடரும் இருந்தால் வேலை நீக்கப்பட்ட 200 பேருடன் றோபோக்களை இணைத்து மேலும் இரண்டு தொழிற்சாலைகளை உருவாக்கலாம்.

இதேபோல மனித உணர்வுமிக்க ரோபோக்களும் வருகின்றன.. இவை சுமார் 87 வீதமான பணிகளை செய்யக்கூடியவை..

எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்குள் ஐரோப்பாவின் தொழிற்சாலைகள் அரைப்பங்கு ரோபோக்களால் நிறை;துவிடும்..

இதற்கான முதலீடுகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குகிறது..

இவ்வாரம் வெளியாகியுள்ள ஐரோப்பிய செய்தி

அலைகள்

0 Responses to ஐரோப்பிய தொழிற்சாலைகளில் அரைப்பங்கு றோபோக்கள் பணிக்கு வரப்போகின்றன...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com