Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள ஆசிரமத்தில் நித்யானந்தாவுக்கு பட்டாபிஷேக விழா நேற்று(5.5.2012) இரவு நடந்தது. நித்யானந்தாவுக்கு மதுரை ஆதீனம் மலர் கிரீடம் சூட்டினார். அவரை அரியணையில் அமர வைத்து பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.

அப்போது நித்யானந்தா பக்தர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விழாவில் மதுரை ஆதீனம் பேசியபோது, ’’வாழ்நாளில் இந்த நாள் புதிய நாள். மன மகிழ்ச்சி, மன நிம்மதி தரும் நாள். சிவன்-பார்வதி நிறைந்த திருவண்ணாமலையில் ஆதீன தலைவராக நித்யானந்தாவை அறிவித்து பட்டாபிஷேகம் செய்வது சிறப்பான ஒன்று. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட தலம், அருணகிரிநாதர் அருளிய தலம், ரமணர் சேஷாத்திரி, விசிறி சாமியார் வாழ்ந்த தலம்.

திருவண்ணாமலை. ஆதீனமாக பதவி வகிக்க மேதை, ஞானி, பக்குவம், போர்க்குணம் ஆகியவை இருக்க வேண்டும். அது திருவண்ணாமலையில் பிறந்த நித்யானந்தாவுக்கு இருக்கிறது.

சிவன்-பார்வதி எனது மனதில் தோன்றி மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசாக நித்யானந்தாவை அறிவிக்க வேண்டும் என்று கூறினர்.

அதன்படி நித்யானந்தா அறிவிக்கப்பட்டு உள்ளார். நாங்கள் செய்த புண்ணியத்தால் நித்யானந்தா கிடைத்துள்ளார். முதலில் ஆதீனமாக பதவி ஏற்க மறுத்தார்.

பல பிரச்சனைகள் வரும் என்று கூறினார். ஆனால் நான்தான் அவரை வற்புறுத்தி ஆதீனமாக பதவியேற்க வைத்துள்ளேன்.

இளைய ஆதீனமாக யாரை அறிவிக்க வேண்டும் என்ற அதிகாரம் எனக்கு மட்டும்தான் உள்ளது. நித்யானந்தா பரம்பரை தென்மண்டல சைவ வேளாளர் பிரிவில் இருந்து வந்தவர். அவர் ஆதீனமாவதற்கு முழு தகுதியும் உள்ளது. ஆதீனங்கள் கோர்ட்டு, போலீஸ் நிலையத்துக்கு செல்லக்கூடாது.

ஆதீனமாக உள்ள நித்யானந்தா இனிமேல் கோர்ட்டு, போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது. மதுரை ஆதீனத்துக்கு சிறந்த நிர்வாகியை உருவாக்கி செல்வதால் என் உயிர் மூச்சு மகிழ்ச்சியுடன் பிரியும்’’ என்று தெரிவித்தார்.

0 Responses to நித்தியானந்தா மீதுள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாதாம்: வேண்டுகோள் விடுக்கிறார் மதுரை ஆதீனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com