Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கருணாநிதி டெசோ மாநாடு நடத்துவது ஈழத் தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துமென தமிழக இளைஞர் காங்கிரஸின் யுவராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் 'அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி அதிக கட்சி பொறுப்புக்கும், ஆட்சி பொறுப்புக்கும் தயார் என்று அறிவித்துள்ளார். இதனை தமிழக இளைஞர் காங்கிரஸ் மனதார வரவேற்கிறது.

ராஜீவ் காந்தியின் ஆட்சி காலத்தில் நாட்டில் தொழில் புரட்சி ஏற்பட்டது. இந்தியாவை வல்லரசாக்கும் தகுதி ராகுல்காந்திக்கு உள்ளது. எனவே கட்சி தலைவர் சோனியாவும், பிரதமரும் நல்ல பொறுப்பினை ராகுல்காந்திக்கு வழங்க வேண்டும். இலங்கையில் போருக்கு பின்னால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்த நேரத்தில் டெசோ மாநாடு நடத்துவது பழைய பிரச்சினைகளை தூசு தட்டுவது போன்று உள்ளது. இது தமிழ் ஈழ மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.

இலங்கை பிரச்சினையில் டெசோ மாநாடு குழப்பத்தினை விளைவிக்கும். இலங்கை பிரச்சினையில் காங்கிரசை பொறுத்த மட்டில் தமிழ் ஈழமக்களின் பாதுகாப்பு, வளர்ச்சியை கட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் தமிழக மக்களின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் உள்ளன. இதன் முடிவு ஈழ மக்களின் எதிர்காலத்தினை பாதிக்கும்' என்றார்.

1 Response to டெசோ மாநாடு ஈழத் தமிழர்களுக்கு ஆபத்தானது: யுவராஜா

  1. shiva Says:
  2. what ever karunanaithi do for sri lankan tamils is always criticised.why?It is very easy to comment on someones actions.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com