Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் ஈழக் கோரிக்கை மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் கருணாநிதியின் ஈழக் கோரிக்கை மாநாட்டில் பங்கேற்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாதம் 12ம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பனர்கள் பற்றிய தகவல்களை கருணாநிதி வெளியிட்டுள்ளதாகவும் இலங்கைத் தமிழர்களுக்கு என்றாவது ஓர் நாள் ஈழ இராச்சியமொன்றை உருவாக்க முடியும் என கருணாநிதி தெரிவித்துள்ளதாக திவயின மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 Responses to கருணாநிதியின் ஈழக் கோரிக்கை மாநாட்டில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com