Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெசோ பெயரிலான மாநாடு ஈழத் தமிழர்களுக்குப் பயனளிக்காது என தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” என்ற நூல் அறிமுக விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழினம் பல இடங்களில் கொத்தடிமைகளாக்கப்படும் சீரழிவு நிகழும் நிலையில், உலக நாடுகள் முழுவதும் உள்ள இந்த இனம் நம்பி இருப்பது தமிழகத்தைத்தான். தமிழ் இளைஞர்கள் விழிப்புணர்வு பெற ஆயுதம் மற்றும் கருவியாக இந்த நூல் இருக்கும்.

ஈழத் தமிழர்களுக்காக மாநாடு நடத்தப் போவதாக வீர முழக்கம் செய்த கருணாநிதியை உள்துறை அமைச்சர் ப. சிதம்பம் சந்தித்துவிட்டு சென்ற பின்னர், சுருதி குறைந்து தனி ஈழக் கோரிக்கை இப்போதைக்கு இல்லை என்கிறார்.

போர் முடிந்து 3 ஆண்டுகளாகிவிட்டது. அவர் இப்போது துடிக்கிறார். கருணாநிதி கூறும் டெசோ மாநாடு ஈழத் தமிழர்களுக்கு பயனளிக்காது என்பது அவருக்கும் தெரியும். என குறிப்பிட்டார்.

0 Responses to டெசோ மாநாடு ஈழத் தமிழர்களுக்கு பயனளிக்காது: பழ. நெடுமாறன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com