Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 01.04.2014

பதிந்தவர்: ஈழப்பிரியா 01 April 2014

மேஷம்
நண்பர்களால் உதவிகள் கிடைக்கும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க இல்லத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள்.

ரிஷபம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். தூரத்து உறவினர்களின் வருகை உண்டு. நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகளைச் சேர்ப்பது பற்றிச் சிந்திப்பீர்கள்.

மிதுனம்
இன்பங்கள் கூடும் நாள். சிறப்பான பணிகளைச் செய்து குடும்பப் பெரியவர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

கடகம்
உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழும் வாய்ப்பு உண்டு.

சிம்மம்
வளர்ச்சி கூடும் நாள். கடந்த சில நாட்களாக நடைபெறாத காரியங்கள் இன்று நடைபெறும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு.

கன்னி
தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். உத்தியோகம் சம்மந்தமாக அலைச்சல் அதிகரிக்கும். எதையும், யாரிடமும் நாசூக்காக சொல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்
பொருளாதார நிலை உயர புதிய நண்பர்களைச் சந்திக்க வேண்டிய நாள். சான்றோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சிப்பீர்கள்.

விருச்சகம்
தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வி.ஐ.பிக்கள் வீடு தேடி வருவர். வருமானம் திருப்தி தரும். பயணங்களால் பலன் உண்டு. உதிரி வருமானங்கள் பெருகும்.

தனுசு
விருப்பங்கள் நிறைவேறும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் உண்டு. மாலையில் மனதிற்கினிய சம்பவம் நடைபெறும்.

மகரம்
சந்தோஷங்களைச் சந்திக்கும் நாள். மற்றவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிட்டும். பெற்றோர் மீது பிரியம் கூடும்.

கும்பம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே மாற்றியமைப்பீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும்.

மீனம்
செல்வ நிலை உயரும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். கூட்டுத் தொழில் தனித் தொழிலாக எடுத்த முயற்சி வெற்றி தரும். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பொருள் சேர்க்கை உண்டு.

0 Responses to இன்றைய ராசி பலன் | 01.04.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com