இந்தியாவின் எந்தப் பகுதியிலும் மோடி அலை வீசவில்லை என்றும், மோடிதான் நாடு முழுவதும் அலைந்துகொண்டிருப்பதாகவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அரக்கோணம் திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோவனை ஆதரித்து, ஆற்காடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் மேலும் பேசியதாவது,
நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்றால், அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் மட்டும் போட்டியிடாமல் வாரணாசியிலும் போட்டியிடுவது ஏன். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் தோல்வி என்று அவருக்கு பயம் வந்துவிட்டது. தோல்வி பயம் காரணமாகவே மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மோடி அலை வீசவில்லை. திமுக தலைமையிலான அணி பலமான கூட்டணி. மக்கள் பலம் இந்த கூட்டணியில் உள்ளது. எதிர்காலத்தில் மக்கள் பிளவுப்பட்டுவிடக் கூடாது என்பற்காகவும், அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதறக்ôகவும் மதசார்பற்ற வேட்பாளர்களை வெற்றியடைய செய்ய வேண்டியது அவசியம் என்றார்.

0 Responses to தோல்வி பயம் காரணமாகவே நரேந்திர மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்: கி.வீரமணி பேச்சு