Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அறிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பின் ஆராய்ந்து முடிவை இந்த மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிராமம் கிராமமாக சென்று மக்களின் கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் அறிந்து வருகின்றோம். எவ்வாறெனினும், இன்று வரை யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை. இம்மாத இறுதியில் நாம் எமது முடிவை அறிவிப்போம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு?; இம்மாத இறுதியில் அறிவிப்பு: கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com