Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திடம் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் அதிகாரப் பரவலாக்கத்தை என்றைக்குமே எதிர்பார்க்க முடியாது என்று முன்னாள் அமைச்சரும், பொது எதிரணியின் முக்கியஸ்தருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதனையும் செய்யப் போவதில்லை. அந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கு அபிவிருத்தியினால் மட்டும் எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். அத்துடன் நல்லாட்சிக்காக இந்தியாவை போன்று சுயாதீன தேர்தல் ஆணைக்குழு உட்பட்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

இலங்கையில் மதங்களுக்கு இடையிலான உறவுகள் சீர்குலைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் அளுத்கம பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினருக்கே அரசாங்கத்தின் 70வீத பதவிகள் வழங்கப்பட்டுள்ளன, ஏனைய 28 வீத அமைச்சுப் பதவிகள் மட்டுமே பிறருக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் மக்கள் அதிகாரப் பரவலாக்கத்தை எதிர்பார்க்க முடியாது: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com