கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு அங்கத்துவ கட்சிகள் அனைத்தினதும் ஒத்துழைப்பும், அங்கீகாரமும் தேவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்கிற விடயத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது மிக முக்கியமானது. தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு, பெரும் பங்களிப்புகளை செய்தவர்கள். எனவே, அவர்களது ஒத்துழைப்பும் அங்கீகாரமும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யமுடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய மாட்டோம் என நாம் ஒரு போதும் கூறவில்லை. அதனை பதிவு செய்வதென்றால் அதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும். எமது மக்கள் முழுமையாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போது சகலரும் ஒருமித்து செயல்படும் வேளையில், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு உயர்ந்த அங்கீகாரத்தை பெற்றுள்ள நிலையில், அந்த அங்கீகாரத்தை சகலரும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்துவிட்டவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் என கூறிவிட முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு அங்கத்துவக் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்: சம்பந்தன்