Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரவிருக்கும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயலலிதா முதல்வராகப் பதவி அதிகாரப்பூர்வமற்றத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வெளியான நிலையில், கடந்த 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். நேற்று மாலை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசிததாகத் தெரிய வருகிறது. இதையடுத்து வருகிற ஞாயிற்றுக் கிழமை அன்று ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக மீண்டும் அரியணை ஏறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்றத்தில் உள்ள ஜெயலலிதாவின் அறையை இதுவரை யாரும் பயன்டுத்தாமல் இருந்ததால்,அறையை சீரமைக்கும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர்.அனேகமாக அடுத்த வாரத்தில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதா தலைமையில் சட்டபேரவைக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to வருகிற ஞாயிற்றுக்கிழமை ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்பு?

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com