இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தம்மிடம் உள்ள ஆதாரங்களை பகிர்ந்து கொள்ள தயார் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் தலைவி யஸ்மின் சூக்கா அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் தமது அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சூக்கா கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய செய்தி ஒன்றில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயார் என்றும் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த விடயம் மிகவும் தீவிர நிலையை ஏற்படுத்தும் விடயம் என்பதால், கவனமாக செயற்பட வேண்டியுள்ளது என்று இலங்கை அரசாங்கத்தரப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே புண்பட்ட இதயங்களையும் மனங்களையும் ஆற்றுப்படுத்தி நல்லிணகத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமையையும் அரசாங்கத்தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

0 Responses to மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையை பகிர்ந்து கொள்ளத் தயார்: யஸ்மின் சூக்கா