ஜனவரி 08ஆம் திகதி ஆரம்பித்த புரட்சியைப் பாதுகாத்து நாட்டினை 60 மாதங்களில் கட்டியெழுப்புவோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாவது, “நாம் புதிய நாடொன்றைக் கட்டியெழுப்பவே ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கியுள்ளோம். இதற்கிணங்க ஜனவரி 08ஆம் திகதி ஆரம்பித்த புரட்சியை பலப்படுத்துவதே எமது நோக்கம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நாம் இந்த நாட்டை முன்னேற்றுவோம்.
நாடுமுழுவதையும் நோக்கும்போது இன்று மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முற்றாக நிராகரித்துள்ளதைக் காண முடிகின்றது. அவருக்கு பெரும்பான்மை கிடைக்கப் போவதுமில்லை. எனினும் அவர் பகல் கனவு காண்கிறார். நல்லாட்சியின் கீழ் நாட்டின் அனைத்து மக்களும் இணைந்துள்ள அமைதியான தேர்தலை இம்முறை பார்க்க முடிகிறது.
1989 பாராளுமன்றத் தேர்தலின்போது நாம் ‘போஸ்டர்’கள் மற்றும் ‘கட்அவுட்’களை வைப்பதற்கு அனுமதித்தோம். அன்றிருந்த நிலமையை கருத்திற் கொண்டே அதைச் செய்தோம். எனினும் அது தொடர்ந்து பழக்கத்துக்கு வந்துவிட்டது. அதற்கென பெருந்தொகை நிதி செலவிடப்பட்டு வருகிறது.
தற்போது ‘போஸ்டர், ‘கட்அவுட்’கள் இல்லாத அமைதியான தேர்தலைப் பார்க்க முடிகிறது. இம்முறை தேர்தலில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க நல்லாட்சியின் கொள்கை இப்போதே அமுலாகி இருப்பதை நாம் குறிப்பிட முடியும்.
நாட்டு மக்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்து ஊழல் மோசடிகளை நிறுத்தி நிறைவேற்று ஜனாதிபதி முறை அதிகாரத்தை மட்டுப்படுத்தி சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையையும் மேற்கொண்டு விட்டே இந்த தேர்தலில் இறங்கியுள்ளோம். இவற்றின் பிரதிபலன்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர். இது மக்கள் தேர்தல், இந்த தேர்தலில் யாரைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற தீர்மானம் மக்களுடையதே.
60 மாதங்களில் புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு நாம் முன்வைத்துள்ளோம். நாம் கட்டியெழுப்பும் புதிய நாடு தூய்மையான ஆட்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஒழுக்கமுள்ள அரசாங்கம் சட்டம் சகலருக்கும் பொது என்பதுடன் இணக்கப்பாட்டுடன் செயற்படும் அரசாங்கமாகவும் இருக்கும்.
நாம் கட்டியெழுப்பும் புதிய நாட்டில் அனைவருக்கும் தொழில்வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும். மக்கள் கைகளில் பணம் புழங்கும் வகையில் அனைவரதும் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு செயற்படும் நாடாக அமையும். சுற்றாடலைப் பாதுகாக்கவும் சுதந்திரமாக சிந்தித்து செயற்படவும் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதற்குமான நாடாகவும் அனைவருக்கும் சம உரிமை உள்ள நாடாகவும் அது நிகழும்.
அனைத்து மக்களும் தத்தமது மதங்களை வழிபடக்ககூடிய பூரண சுதந்திரமுள்ள நாடாகவும் பெண்கள் பயமின்றியும் இளைஞர்கள் நாளையைப் பற்றிய நம்பிக்கையை அதிகரித்துக்கொள்ளும் நாடாகவும் அது அமையும். ஒரு குடும்பத்தைக் கருத்திற் கொண்டல்லாமல் நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களின் முன்னேற்றம் பற்றி சிந்திக்கும் நாடாகவும் அது அமையும். இத்தகைய நாட்டை நாம் 60 மாதங்களில் கட்டியெழுப்புவோம். ” என்றுள்ளார்.

0 Responses to ஜனவரியில் ஆரம்பித்த புரட்சியைப் பாதுகாத்து நாட்டை கட்டியெழுப்புவோம்: ரணில்