சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்பு கடத்தல் மோசடியுடன் இலங்கை வைத்தியர்கள் 06 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக இந்திய பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூன்று பேரடங்கிய குழுவொன்றை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.
சுகாதார அமைச்சின், தனியார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் காந்தி ஆரியரத்ன, மேல்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தீப்தி பெரேரா உட்பட சுகாதார அமைச்சின் விசாரணை பிரிவின் சிரேஷ்ட அதிகாரியும் அந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி இந்திய பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கை வைத்தியர்கள் 06 பேரும், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்த தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்று அந்தக் குழு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒருவார காலத்துள் உடனடியாக அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சுக்கு சமர்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால அந்த குழுவிற்கு பணித்துள்ளார்.
அந்த அறிக்கையின் படி சுகாதார அமைச்சினால் சம்பவம் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அறிக்கையை ஆராய்ந்து பார்த்ததன் பின்னர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 06 வைத்தியர்கள் தொடர்பாக மருத்துவ ஆணைக்குழுவுக்கு அறிவிக்க இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

0 Responses to உடல் உறுப்பு கடத்தல் சம்பவங்களுடம் தொடர்புடைய தனியார் வைத்தியசாலைகளில் விசாரணை!