Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) முக்கியஸ்தர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட 13 பேரின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பறித்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டு வருவதாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்ட, பவித்ரா வன்னியாராச்சி, கெஹலிய ரம்புக்வெல்ல, சீ.பி.ரத்நாயக்க, காமினி லொகுகே, உபேக்ஷா சுவர்ணமாலி, ரோஹித அபேகுணவர்த்தன, மஹிந்த யாபா அபேவர்த்தன, உள்ளிட்ட 13 பேர் தொகுதி அமைப்பாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to கெஹலிய, பவித்ரா உள்ளிட்ட மஹிந்த ஆதரவாளர்களின் பதவிகளை சுதந்திரக் கட்சி பறித்தது!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com