Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்களின் தந்தையர் சங்கரப்பிள்ளை ஆறுமுகம் அவர்களின் பூதவுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் எம்.பி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்கள் விடுதலைப் புலிகளின் முன்னணித் தளபதிகளில் ஒருவராக விளங்கியதுடன் ஆனந்தபுரம் சமரில் வீரச்சாவடைந்திருந்தார்.

இவரது தந்தையாரான சங்கரப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் இன்றைய தினம் அதிகாலை இயற்கை எய்தியுள்ளார்.

அவரது பூதவுடல் கிளிநொச்சி பாரதிபுரத்தில் உள்ள அவரது வசிப்பிடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் எம்.பி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

அவரது வீட்டில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பாராதிபுரம் மயானத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் தகனக்கிரியைகள் நடைபெற்றன.

0 Responses to பிரிகேடியர் கடாபியின் தந்தையாருக்கு சிறிதரன் எம்.பி அஞ்சலி..

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com