ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 29 ஆண்டுகளுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி திலீபனுக்கு (இராசையா பார்த்தீபன்) நல்லூர் வீதியில் இன்று திங்கட்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும், பொதுமக்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான திலீபன், “மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும், சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்” என்கிற விடயங்கள் அடங்கிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராடத்தினை, 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி ஆரம்பித்திருந்தார். பன்னிரண்டு நாட்கள் நீடித்த அவரது உண்ணாவிரதம் 1987 செப்டம்பர் 26, அவரது உயிர்கொடையுடன் நிறைவுக்கு வந்தது.

0 Responses to ‘தியாகி’ திலீபனின் 29வது நினைவு தினம் நல்லூரில் அனுஷ்டிப்பு!