இந்தியாவின் மற்ற மாநிலங்கள் ம் மட்டுமின்றி மற்ற நாடுகளும் அம்மா உணவகத்தைப் பார்வையிட்டு சென்று, தாங்களும் இது போல ஆரம்பிக்கலாமா என்று ஆலோசிப்பது எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பெருமை என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா சென்னை ராயப்பேட்டை ஒம்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் நடிகர் கஞ்சா கருப்பு, த.மா.கா. கட்சியில் இருந்து விலகிய திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் எம்எல்ஏ வேலூர் ஞானசேகரன் ஆகியோர் இணைந்தனர். அவர்களுக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை வழங்கினார் ஜெயலலிதா. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய ஜெயலலிதா, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, இ. கம்யூ, த.மா.கா. மதிமுக, வி. சிறுத்தைகள், கொ.ம.தே.கட்சிகள் இன்னும் பிற கட்சிகள், அமைப்புகளில் இருந்து விலகி 91,308 பேர் இன்று முதல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளீர்கள். உங்கள் அனைவரையும் பொதுச்செயலாளர் என்ற முறையில் வரவேற்கிறேன் என்றார். அப்போதுதான்மேற்கண்டவாறு அம்மா உணவகம் குறித்துப் பெருமை பட பேசினார் ஜெயலலிதா.

0 Responses to இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மட்டுமின்றி, மற்ற நாடுகளும் அம்மா உணவகத்தைப் பார்வையிடுவது பெருமை: முதல்வர் ஜெயலலிதா