சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவினை மேலும் பலப்படுத்திக் கொண்டு முன்செல்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சீனாவின் 67வது தேசிய தினம் மற்றும் சீன- இலங்கை நட்புறவு சங்கத்தின் 35வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தி மற்றும் முதலீட்டுத்துறை போன்றே சர்வதேச மட்டத்திலும் சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவு உயர்மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சீனா எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கைக்காக முன்நிற்கும் நட்புமிக்க நாடு என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
கல்வித்துறை, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான அபிவிருத்தியில் சீனா வழங்கும் ஒத்துழைப்பானது அளப்பரியது என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, தான் ஜனாதிபதியாக பதவியேற்று முதன்முதலாக சீனா சென்றபோது அந்நாட்டு மக்களும், அரசும் தனக்கு மிகுந்த வரவேற்பளித்ததையும் நினைவுபடுத்தியுள்ளார்.
அத்துடன் நாட்டில் உள்ள சிறுநீரக நோயாளர்களுக்காக சீனா வழங்கிய சிறுநீரக வைத்தியசாலையானது அண்மைய நாட்களில் சீனா இலங்கைக்கு வழங்கிய மிகப்பெரிய பரிசு என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

0 Responses to சீனா - இலங்கை இடையேயான உறவினை பலப்படுத்தி முன்செல்ல நடவடிக்கை: ஜனாதிபதி