பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்கிற தகவ்கள் வெளியாகி உள்ளது.
உரி எல்லையில் பாகிஸ்தான் எல்லை வழியாக தீவிரவாதிகள், இந்திய இராணுவ முகாம்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நுழைந்து, அங்கிருந்த தீவிரவாத முகாம்களை அழித்துள்ளனர். அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல், பிற்பகல் 2 வரை நீடித்தது என்றும், முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன என்றும் தகவல் வெளியிட்டுள்ளார் இந்திய இராணுவ ஜெனரல்.
இதில், பல தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும், எண்ணிக்கை பின்னர் தெரிய வரும் என்றும் தெரிவித்துள்ள அவர், பாகிஸ்தான் தீவிரவாத்தத்தை தூண்டுவித்து, இந்திய எல்லையில் தாக்குதல் நடத்த உதவி வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவே இந்திய வீரர்களின் இந்த அதிரடித் தாக்குதல் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல்!