வடக்கு மாகாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை தான் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
வடக்கு- கிழக்கு மக்கள் கடந்த 30 வருடங்களாக இராணுவத்தினரையே இரவும் பகலும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். எனினும், புதிய அரசாங்கத்தை பொறுத்தவரையில் வடக்கு- கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஏற்கனவே இனங்கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே காவிந்த ஜெயவர்த்தன இவற்றைக் கூறியுள்ளார்.
தேசிய அரசாங்கம் முழுமையாக கடந்தகால காயங்களை ஆற்றி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைவதுடன், ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து எந்த அதிகாரி வந்தாலும் வராவிட்டாலும் மக்களின் அபிலாசைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சமாதானம் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அவர்களும் சுதந்திரமாக செயற்பட வழியேற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்: காவிந்த ஜெயவர்த்தன