விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகக்கூடாது. என்ற ஒரு பயத்தினாலேயே முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதில் விஷஊசி விவகாரம் தற்போது எந்த நிலையில் உள்ளது, இதில் எத்தனைபேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
12000 விடுதலைப்புலிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு காட்டிக் கொண்டிருக்கின்றது.
இவர்கள் புனர்வாழ்வளிக்கப்படும் போது வஷ ஊசிகள் மூலம் மட்டுமல்ல உணவின் மூலமாகவும் நஞ்சு உட்புகுத்தப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தையும் தெரிவித்தார்.
இவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு 2 வருடங்கள் கழிந்த பின்னர், காரணமின்றி மரணங்கள் ஏற்படுவதாலேயே இது நிரூபனமானது.
கதிர்வீச்சு காரணமாகவும் கூட இந்த நச்சு மருந்து செலுத்தப்பட்டிருக்கலாம் என்றும், இவர்கள் கண்பார்வை இழந்ததோடு, விவேகமாக செயற்பட்ட இளைஞர்கள் மிகவும் பலவீனமான நிலையிலும், மூலை கிரகிக்கும் தன்மை, ஞாபக சக்தியையும் இழந்திருக்கின்றார்கள் என ஆனந்தி கூறியுள்ளார்.
இந்த விஷஊசி விவகாரத்தில் எத்தனைபேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், இவை நிரூபிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு பதிலளிக்கையில், தற்போதுதான் அந்தப் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் இதற்கான போதியளவு மருத்துவ வசதி எம்மிடம் இல்லை. இதற்காக மத்திய அரசை நாம் நம்பத்தயாராக இல்லை என பகிரங்கமாக கூறியதோடு, ஐ.நா ஆணையாளரிடமிருந்து இதற்காக ஒரு விசேடக் குழுக்களை நியமிக்குமாறு கோரிக்கையை முன்வைப்பதாகவும் கூறினார்.
இது பற்றி முதலமைச்சரிடம் கலந்துரையாடி, WHO நிறுவனத்தினூடாக பரிசோதனை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும், நாம் சந்தேகிப்பதைப் போன்று உண்மையிலேயே விஷ ஊசி செலுத்தப்பட்டிருந்தால் இதற்கான மாற்று மருந்து கொடுத்து உறவுகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையில், இதுவரை புனர்வாழ்வளிக்கப்பட்ட 111 இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர். 12000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுமானால், மருத்துவக் குழுக்களை நியமித்து இதற்கான தீர்வை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்தார்.

0 Responses to மத்திய அரசை நம்ப தயாராக இல்லை! மடியும் உறவுகளின் உயிர்கள் ஐ.நாவின் கையில் - ஆனந்தி பகிரங்கம்