அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை 146 முன்னாள் போராளிகள் மருத்துவப் பரிசோதனைகளில் பங்கெடுத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விச ஊசி விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் முதலாம் வாரம் கடந்த 2ஆம் திகதியும், இரண்டாம் வாரம் 9ஆம் திகதியும், மூன்றாம் வாரம் 15ஆம், 16ஆம் திகதியும், நான்காம் வாரம் 23ஆம் திகதியும், ஐந்தாம் வாரம் 30ஆம் திகதியும் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகள் வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் இடம்பெற்றன.
அதில் யாழ் மாவட்டத்தில் 29 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 24 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 81 பேரும், வவுனியா மாவட்டத்தில் 07 பேரும், மன்னார் மாவட்டத்தில் 05 பேருமாக 146 பேர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதில் 2 ஆம் திகதி 26 பேரும், 9 ஆம் திகதி 47 பேரும், 15 ஆம் 16 ஆம் திகதிகளில் 22 பேரும், 23 ஆம் திகதி 30 பேரும், 30 ஆம் திகதி 21 பேரும் மருத்துவப் பரிசோதனையில் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, எதிர்காலத்தில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேற்படி மருத்துவப் பரிசோதனைகள் நடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

0 Responses to விச ஊசி விவகாரம்; இதுவரை 146 முன்னாள் போராளிகள் மருத்துவப் பரிசோதனையில் பங்கெடுப்பு!