முதல்வர் ஜெயலலிதாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா, கடந்த 15 நாட்களாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார். இவருக்கு கடந்த வாரம் லண்டனிலிருந்து சிறப்பு மருத்துவ நிபுணர் ரிச்சர்டு, சிகிச்சை அளித்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று மாலை ரிச்சர்டு, லண்டனிலிருந்து மற்றும் ஒரு மருத்துவ நிபுணரை அழைத்துக்கொண்டு வந்து சிகிச்சை அளித்து வருகிறார் என்றும் தகவல் வெளியானது.இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை 3 மருத்துவ நிபுணர்கள் வந்தார் என்றும், நேற்று மாலை முதல் முதல்வருக்கான சிகிச்சைகளை இந்த மருத்துவ நிபுணர்கள் துவங்கி உள்ளனர் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ள அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், முதல்வர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சைப் பெற்று நலமுடன் வீடு திரும்புவார் என்றும் அறிவித்துள்ளது.

0 Responses to முதல்வர் ஜெயலலிதாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை!