கிளிநொச்சியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் சமரவிக்ரம் என்ற பொலிஸ் அதிகாரி ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி வேண்டி வடமாகாண முழுவதும் இன்று முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கிணைவாக கிளிநொச்சியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கு கூடியிருந்த இளைஞர்கள் போத்தல்களை நடு வீதியில் உடைத்தும் வீதியின் நடுவில் இருந்தும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனை கட்டுப்படுத்த முனைந்த பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்தால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வந்த கலக தடுப்பு பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் போக்குவரத்தில் ஈடுபட்ட வாகனங்கள் மீது சிலர் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் A-09 வீதிகளில் ரயர்கள் போட்டு ஏரித்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு இடையுறுகள் ஏற்பட்டு இருந்தது.
இதேவேளை கிளிநொச்சி கரடிபோக் சந்திக்கு அருகில் இருந்த வெதுப்பக கடையின் கண்டியும் உடைக்கபட்டுள்ளது.




0 Responses to கிளிநொச்சியில் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்! டயர்கள் எரிப்பு!