தமிழக நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று மாலை மீண்டும் கூடுகிறது.
முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த இலாகாக்கள் நிதி அமைச்சர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை வகிக்கவும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளத.
ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் எடுக்கப்படும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பாக சட்ட மசோதா இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதய் திட்டம் தொடர்பாக மத்திய எரிசக்தி துறை அமைச்சரை தமிழக மின்துறை அமைச்சரை சந்தித்த நிலையில், இந்தத் திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று மீண்டும் கூடுகிறது