வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை காலை) வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளார். அவர் பணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து தூக்கியெறியப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். அவரது சடலம், மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்டனி ஜெகநாதன், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

0 Responses to வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் மரணம்!