நாடு முழுவதும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாததால் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டு உள்ளார்.
மத்திய அரசு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் தரப்பில் கடந்த சில வருடங்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசு, அதை நிறைவேற்ற உறுதி அளித்தும், இன்னமும் நிறைவேற்றிய பாடில்லை. இந்நிலையில் ஹரியானாவில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் ராம் என்பவர், இதுத தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார்.
ஆனால், அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இவர் குடும்பத்தினரிடம் தாம் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக கூறி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, ராம் தற்கொலை செய்துக்கொண்டு உள்ளார்.கடிதத்தில் மத்திய அரசு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்கிறத் திட்டத்தை அமல்படுத்தத் தவறி விட்டதால் தாம் தற்கொலை செய்துக் கொண்டதாக எழுதியுள்ளார்.

0 Responses to ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்தாததால் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை