யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கொள்ளை, வாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படும் ‘ஆவா’ குழுவின் பின்னணியின் இராணுவம் இல்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கீரிமலை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இடம்பெயர்ந்த ஒருதொகை மக்களுக்காக வீடு கையளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ருவான் விஜயவர்த்தன கூறியுள்ளதாவது, “ஆவா குழு தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சிலர் பலவிதமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இன்னும் சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாகி வருவதாகவும், இந்தக் குழு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற ஒன்று எனவும் கூறிவருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை.
ஆவா குழு என்பது அப்பாவி மக்களிடம் இருந்து கப்பம் கோருகின்ற குழுவாகும். சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்ப ட்டுள்ளனர். விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. எந்தவித சூழ்ச்சியும் இல்லை. இதனை இராணுவம் செய்கின்றதா அல்லது விடுதலைப் புலிகள் இதனூடாக மீளுருவாகின்றார்களா என்ற ஒன்றுமே இல்லை. கப்பம் கோருகின்ற ஒரு குழுவே இது. எனவே விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.” என்றுள்ளார்.

0 Responses to ‘ஆவா’ குழுவின் பின்னணியில் இராணுவம் இல்லை: ருவான் விஜயவர்த்தன