கிழக்கு மாகாணத்தில் இன மோதல்களை தோற்றுவிக்கும் நோக்கில் சில தரப்புக்கள் சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறித்த சதிகாரர்களுக்கு கிழக்கிலுள்ள சில அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்குவது தற்போது வெளிப்பட்டு வருகின்றது. எனவே, அவர்களின் உண்மையான முகங்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் கடந்த நாட்களில் இடம்பெற்ற இனவாதச் செயற்பாடுகள் தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்ட போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் முஸ்லிம் மக்களின் பூர்விக பகுதிகளில் ஆங்காங்கே புத்தர் சிலைகள் முளைக்கின்றன. அதுபோல, மட்டக்களப்பு மாவட்டத்தில் பலவந்தமாக பௌத்த குடியேற்றங்களை நிறுவ சில தரப்புக்கள் முனைகின்றன. இவ்வாறான விடயங்கள் தமிழ் முஸ்லிம் மக்களை அச்சத்துக்குள்ளாகியுள்ளது. இவை, சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களிடையே திட்டமிட்ட வகையில் மோதலை ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்கள்.
யுத்தத்தைக் காட்டி தமது பிழைப்பை நடத்திய அரசியல்வாதிகளுக்கு யுத்தமொன்று இல்லாத போது தமக்கு அரசியல் நடத்துவதற்கு முடியாது என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு இனங்களிடையே விரிசலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு எதிராக சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to கிழக்கில் இன மோதல்களை தோற்றுவிக்கும் சதி முயற்சிகள்: ஹாபிஸ் நசீர் அஹமட்