வங்கிகளில் பணம் திருடுவதில் ஹேக்கர்களுக்கு உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் முக்கிய கருவியாக பயன்படுகிறது என்று, சைபர் கிரைம் போலீசார் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளில் இருந்து டெபிட் கார்டு மூலம் சமீபத்தில், பல கோடி பணம் சுருட்டப்பட்ட சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.இவ்வாறு பணம் திருடுவதில் ஹேக்கர்களுக்கு உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் முக்கிய கருவியாக பயன்படுகிறது. பேஸ்புக்கில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த நாள் தினம், மற்றும் உங்கள் செல்போன் எண் இந்த திருட்டின் மூல காரணம் என்று,சமீபத்தில் சைபர் கிரைம் போலீசார் எடுத்த ஆய்வில், 75 சதவீதம் சைபர் குற்றவாளிகள், படித்த இளைஞர்களாகவே இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. எந்த இணையதளத்தை எப்படி முடக்கலாம் என்பது இவர்களுக்கு அத்துப்படியாம்.மோசடி நடப்பதும் இப்படித்தான் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பேஸ்புக் கணக்கை ஹேக் செய்யும் சைபர் குற்றவாளிகள் அதில் இருந்து, பிறந்த தேதி, செல்போன் நம்பர், பெயரை எடுத்துக்கொள்வார்கள்.செல்போன் திருடுபோனதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பார்கள். காவல் நிலையத்தில் ஒரு எப்.ஐ.ஆரை பெற்று, புதிய சிம்கார்டுகளை உங்கள் செல்போன் நம்பரில் பெறுவார்கள். அதை வைத்து உங்கள் ஆன்லைன் வங்கி கணக்கை திறப்பார்கள்.
பேஸ்புக் தகவலை வைத்து போலியான பான் கார்டு பெற்று, ஆன்லைன் வங்கி கணக்குகளை முடக்குவார்கள். வங்கி ஆன்லைன் பாஸ்வேர்ட் மறந்துவிட்டதாக கூறி, புதிய பாஸ்வேர்ட் கேட்பார்கள். வங்கிகள் வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பும் பாஸ்வேர்ட் ரீ-செட்டிங் பார்மட்டை கொண்டு புது பாஸ்வேர்டை உருவாக்குவார்கள்.
பிறகு உங்கள் வங்கி கணக்கிலிருந்து ஆன்லைன் மூலமாக பண பரிமாற்றத்தை எளிதாக முடித்துவிடுவார்கள்.இந்த பிரச்சினையை தீர்க்க பேஸ்புக்கில் உங்கள் பிறந்த நாள், தேதி, வருடம், செல்போன் எண் போன்றவற்றை பதிவிடுவதை தவிருங்கள் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.

0 Responses to பணம் திருடுவதில் ஹேக்கர்களுக்கு உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் முக்கிய கருவியாக பயன்படுகிறது: ஆய்வு!