வடக்கு மாகாணத்திற்கு பொருத்தமற்ற பொருத்து வீடுகளை திணிப்பதற்கு மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முயன்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய (வெள்ளிக்கிழமை) விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதாவது, “வடக்கு- கிழக்கில் பொதுமக்களின் கணிசமான நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அண்மையில் ஜனாதிபதி ஒருதொகுதி நிலங்களை விடுவித்தார். ஆனால் இப்பகுதிகளில் படையினர் மீண்டும் வேலிகளை இட்டுள்ளனர்.
கோயில்கள், வீடுகள், பாடசாலைகள் என்பன அதிகரிக்கப்பட்ட போதும் அவற்றை கட்டியெழுப்ப போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. பெண்களை தலைமையாகக் கொண்ட 90 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. யுத்தத்தினால் சேதமடைந்த பகுதி மக்கள் தேசிய அரசாங்கத்தை நம்பியிருந்தனர். இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கிடைக்கும் என காத்திருந்தார்கள்.
வீட்டுத்திட்டம் குழப்பமாகவே வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கில் 130,000 வீடுகள் தேவைப்படுகின்றன. மீள்குடியேற்ற அமைச்சர் மீது நம்பிக்கையிழந்துள்ளோம். இந்த அமைச்சுக்கு ஒதுக்கிய நிதி போதாது. கடந்த வரவு-செலவுத் திட்டத்திலும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டது. உதவி வழங்கும் நாட்டு மாநாட்டின் ஊடாக கூடுதல் நிதி ஒதுக்குவதாகவே பிரதமர் உறுதியளித்தார். 30 வருடங்களாக வீடுகள் இழந்து, தொழில் இழந்து 3 இலட்சம் பேர் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். நல்லிணக்கம் ஏற்படும் நம்பிக்கையுடன் உள்ளோம்.
65,000 இரும்பு வீடுகளை தலா 2.1 மில்லியன் செலவில் நிர்மாணிக்க மீள்குடியேற்ற அமைச்சர் முயன்று வருகிறார். த.தே.கூ மட்டுமன்றி பலரும் அந்த வீடுகள் பொருத்தற்றவை என்று கூறியிருந்தார்கள். ஒரு இலட்சத்து 2 ஆயிரம் வீடுகளை இந்தப் பணத்தில் நிர்மாணிக்க முடியும். நல்லிணக்க குழுவின் கூட்டத்திலும் இந்த விடயம் பேசப்பட்டது. அத்திவாரம் கொண்ட சீமெந்து வீடுகளை கட்டும் திட்டத்தை மீள்குடியேற்ற அமைச்சர் ஏன் தட்டிக்கழிக்க வேண்டும்.
எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிக்கு ஆசைப்பட்டு பாராளுமன்றம் வரவில்லை. தமிழ் முஸ்லிம் அமைச்சர்கள் பலர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். தேசியப்பட்டியலில் வந்த அமைச்சர் சுவாமிநாதன் 'ஏஜ்ன்ட்' போன்று செயற்பட்டு வருகிறார். பொருத்துவீட்டுத் திட்டத்தை திணிக்க முயன்று வருகிறார். அவர் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டை ஆதரிப்பதா இல்லையா என ஆராய்ந்து வருகிறோம்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கிற்கு பொருத்தமற்ற பொருத்து வீடுகளை திணிப்பதற்கு டி.எம்.சுவாமிநாதன் முயல்கின்றார்: மாவை