வடக்கில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ‘ஆவா’ குழுவினை கட்டுப்படுத்த இராணுவம் அனுமதி கோரியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
‘ஆவா’ குழுவை கட்டுப்படுத்தும் வேலைகளை பொலிஸார் மேற்கொள்வார்கள். அது அவர்களின் பணி. அதில் தலையிடுவதற்கு இராணுவம் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஆவா’ குழுவினை கட்டுப்படுத்துவதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் இராணுவம் கோரியதாக சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

0 Responses to ‘ஆவா’ குழுவை கட்டுப்படுத்துவதற்கான அனுமதியை இராணுவம் கோரவில்லை: இராணுவப் பேச்சாளர்