ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதற்காக மஹிந்த ராஜபக்ஷவிற்கு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன பணம் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதித்தலைவர் மைத்திரிபால சேனாநாயக்க ஆகியோருக்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தன பணம் வழங்கியதாகவும், அவ்வாறு பணம் வழங்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜக்கலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.
பணம் வழங்கப்பட்டமைக்கான ரசீதுகள் தம்மிடம் காணப்படுவதாகவும், தாம் கூறுவது பொய்யென்றால் மஹிந்த ராஜபக்ஷவினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டதாகக் குற்றஞ்சுமத்தியுள்ள சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கட்சியை விட்டு எவரேனும் விலக விரும்பினால் விலக முடியும். ஏனெனில், மக்கள் ராஜபக்ஷக்களை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0 Responses to சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதற்காக மஹிந்தவுக்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தன பணம் வழங்கினார்: சந்திரிக்கா