Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சடலாமாக மீட்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் உறுப்பினரான இனியவன் என்றழைக்கப்படும் தர்மசேனா ரிசிகரன் மரணத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. சாவகச்சேரியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மரணத்திற்கான காரணம் தொடர்பில் குடும்பத்தவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

ஜந்து பிள்ளைகளது தந்தையான அவர் சாவகச்சேரி, டச்சு வீதியில் வசித்து வந்திருந்தார். கடுமையான வறுமை காரணமாக கூலி வேலை செய்தேனும் பிழைத்துக்கொள்ளலாம் அரசியல் வேண்டாமென தான் கணவரிடம் கூறி வந்ததாக மனைவி ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் கீழ் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to சடலமாக மீட்கப்பட்ட போராளி மரணத்தில் சந்தேகம்?

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com