நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணை செயலணியின் இறுதி அறிக்கை கலப்பு விசாரணைப் பொறிமுறையை பரிந்துரை செய்துள்ளதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் ருவிட்டர் பக்கத்தில், உள்நாட்டு, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை (பொறிமுறையை) உருவாக்க வேண்டும் என்ற நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணை செயலணியின் அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் வரவேற்பதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்பதையே செயிட் அல் ஹுசேன் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளார் என்றும் குறித்த ருவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to நல்லிணக்கச் செயலணியின் ‘கலப்பு பொறிமுறை’ பரிந்துரையை ஐ.நா. வரவேற்றுள்ளது!