ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட அவசரசட்டத்தின் மூலம்ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கியள்ளதாக அறிவித்து, தமிழக அரசு இப்போட்டிகளை நடத்துவதற்கு எடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் ராப்பூசல்அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதேபோன்று கோவையில் கொடிசியா வளாகத்தில், ரேக்ளா போட்டிகளை அமைச்சர் வேலுமணி ஆரம்பித்து வைத்துள்ளார். இப்போட்டியில் சுமார் 20 வண்டிகளுட், 40 காகைளும் பங்கு கொண்டதாகவும் தெரிய வருகிறது. அதேபோன்று திருச்சி மணல்பாறையிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிய வருகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் எனும் போராட்டத்தினை ஒருங்கமைத்த கார்த்திகேய சிவசேனாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசின் அறிவுரையின் பேரில் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கி அவசர சட்டம் வந்திருக்கிறது. இது தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்த வெற்றி எனத் தெரிவித்துள்ளார். இந்த அவசரச் சட்டத்தை சட்டரீதியாகவும், நாடாளுமன்ற ரீதியாகவும் நீண்ட கால நிரந்தர தீர்வுகளுக்கு பணியாற்ற வேண்டும் எனவும், இது தொடர்பில் வரும் வாரங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் பிரதமர், தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியது குடிமக்களாகிய நமது கடமை என்று கூறியுள்ள அவர், போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to தமிழக அரசால் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின